அலமேலுமங்காபுரத்தில் உள்ள பி.எஸ் மேல்நிலைப்பள்ளியில் பாலியல் புகாரில் சிக்கிய மூன்று ஆசிரியர்கள் பணியிடைநீக்கம்.

மயிலாப்பூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள பி.எஸ் மேல்நிலைப்பள்ளியின் மூன்று சீனியர் ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இவர்கள் மீது கடந்த பத்து வருடங்களுக்கு முன் இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார்கள் அளித்துள்ளனர். இவர்கள் மாணவிகளை பாலியல் ரீதியாக தொடுவது மற்றும் படங்களை பகிர்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இது போன்ற பாலியல் பிரச்சனைகளை பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஆன்லைன் வழியாக சேகரித்து பள்ளிக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர். தற்போது பள்ளியிலும் இதுபோன்ற புகார்களை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளியின் முதல்வர் தெரிவித்துள்ளார்.

கடந்த பத்து வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்கள் தற்போது ஏன் முன்னெடுக்கப்படுகிறது என்று பள்ளியின் முன்னாள் மாணவர்களை கேட்கும் போது, அப்போது பெற்றோரிடையேயும் மாணவர்களிடையும் இது பற்றி புகாரளிக்க போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் அதே நேரத்தில் அவர்களிடையே பய உணர்வு இருந்ததாலும் முன்னெடுக்கப்படவில்லை. தற்போது அனைத்துக்கும் தீர்வு கிடைப்பதால், அதே நேரத்தில் அனைத்து விஷயங்களும் ஒளிவு மறைவில்லாமல் பேசப்படுவதால் இந்த புகார் இப்போது முன்னெடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

Verified by ExactMetrics