காவேரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் ஆலை தொடக்கம்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இப்போது மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்ய இரண்டு யூனிட்கள் ஏற்படுத்தியுள்ளனர். கோவிட் நேரத்தில் பெரும்பாலான இடங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இதை கருத்தில் கொண்டு இப்போது மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜனை அவர்களே உற்பத்தி செய்ய திட்டமிட்டு இந்த ஆலையை தொடங்கியுள்ளனர். இந்த ஆக்சிஜனை அவசர சிகிச்சை பிரிவில் சேரும் நோயாளிகளுக்கும் மற்றும் வெளி நோயாளிகளுக்கும் பயன்படுத்தவுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.