மயிலாப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ ஆர். நடராஜின் அலுவலகம் ஆர். ஏ.புரத்தில் திறக்கப்பட்டது.

மயிலாப்பூர் முன்னாள் எம். எல். ஏ ஆர்.நடராஜ் அவர்கள் தன்னுடைய அலுவலகத்தை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள சங்கீதா உணவகம் அருகே ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திறந்துள்ளார். தான் எம்.எல்.ஏ.வாக இருந்த போது மயிலாப்பூரில் உள்ள அடுக்குமாடி குடிருப்பளர்களின் சங்கங்கள் தன்னுடன் தொடர்பில் இருந்ததாகவும், தற்போதும் அந்த நட்பு தொடரவும், இது தவிர பொதுமக்கள் தங்கள் குறைகளை அவரிடம் கூறவும் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாக எம்.எல்.ஏ நடராஜ் தெரிவித்துள்ளார். மேலும் இது தவிர நடராஜ் அவர்கள் சில புத்தகங்கள் எழுதி வருகிறார். சிறிய அளவிலான பதிப்பகமும் நடத்தி வருகிறார். இந்த புதிய அலுவலகத்தில் நடராஜ் வாரத்தில் அனைத்து நாட்களிலும் குறிப்பிட்ட நேரங்களில் வந்து செல்வார் என்றும் அந்த நேரத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடராஜ் தவிர இந்த அலுவலகத்தில் அவருடைய பதிப்பக வேலைகளை பார்க்கும் அலுவலக ஊழியர்களும் எப்பொழுதும் பணியில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:
சுவாதி அபார்ட்மெண்ட்ஸ், எண்.59, 3வது மெயின் ரோடு, ஆர். ஏ. புரம், சென்னை 600028.
தொலைபேசி எண்: 9840484411 / மின்னஞ்சல் முகவரி : natarajips@gmail.com