ஆழ்வார்பேட்டையில் மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

கடந்த வாரம் திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தரின் திரைப்படம், மற்றும் சின்னத்திரை, நாடகம் போன்ற பல்வேறு பிரிவுகளில் சேர்ந்து பணியாற்றியவர்கள் ஒன்றாக சேர்ந்து அவருடைய 91வது பிறந்த நாளை கொண்டாடினர். பாலச்சந்தரின் உருவச்சிலை ஆழ்வார்பேட்டையிலுள்ள ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற பெயரில் உள்ள நடிகர் கமலஹாசனின் அலுவலகத்தில் உள்ளது. இங்குள்ள பாலச்சந்தரின் சிலையை அலங்கரித்து பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.