இந்த மயிலாப்பூர் கோவில் குளத்தின் நீர் மட்டத்தில் சிறிய முன்னேற்றம்

மயிலாப்பூர் மாதவபெருமாள் கோவில் குளத்தில் கடந்த வருடம் மழை நீரை சேமிப்பதற்க்காக குளத்தில் இருந்த பழைய மண்ணை அகற்றிவிட்டு புதியதாக களிமண்ணை நிரப்பினர். கடந்த மூன்று வாரங்களாக மழை பெய்ததின் விளைவாக குளத்தில் தற்போது மெதுவாக தண்ணீர் நிரம்ப ஆரம்பித்துள்ளது. குளத்தின் அருகே உள்ள தெருக்களில் வரும் மழை நீரை குளத்தின் அடியில் சென்று சேரும் விதமாக வேலைகளை செய்துள்ளனர். இதன் விளைவாக தற்போது குளத்தில் மூன்று படிக்கட்டுகள் அளவிற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.