காவேரி மருத்துவமனையில் இன்று முதல் ஸ்புட்னிக் தடுப்பூசி வழங்கப்படுகிறது.

ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் இன்று ஜூலை 9ம் தேதி முதல் ஸ்புட்னிக் தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஏற்கனெவே அனைத்து மருத்துவமனைகளிலும் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஸ்புட்னிக் தடுப்பூசியும் சேர்ந்துள்ளது. இந்த தடுப்பூசி இந்தியாவில் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு வாரங்களாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஸ்புட்னிக் தடுப்பூசி மதியம் 2 மணி முதல் 4.30 மணிமுதல் வழங்கப்படவுள்ளதாகவும் இதன் விலை 1,145 ரூபாய் என்றும் அதே நேரத்தில் யாரெல்லாம் இதுவரை ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தாமல் இருக்கிறார்களோ அவர்களே இந்த தடுப்பூசியை எடுக்கமுடியும் என்று காவேரி மருத்துவமனை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

காவேரி மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசி காலையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் விலை 1,410 ரூபாய். தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். உங்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்ட பின்னரே நீங்கள் அங்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். முன்பதிவு செய்ய 044 40006000 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Verified by ExactMetrics