ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்திற்கான தற்போதைய ஏற்பாடுகள் குறித்து பலர் அதிருப்தி அடைந்துள்ளனர்

கடந்த புதன்கிழமை கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் சுமார் இருநூறு பேர் கலந்துகொண்டனர். தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் மற்ற முக்கியமான விழாக்கள் நடைபெறும் நாட்களில் மக்களை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை. இதனால் மக்கள் வருத்தத்துடன் உள்ளனர். இந்த நடைமுறை சரியில்லை என்று தெரிவிக்கின்றனர்.

பிரதோஷம் நடைபெறும் நாட்களில் பிரதோஷ ஆராதனை நிகழ்ச்சி முடிந்த பிறகே கோவிலுக்குள் மக்களை அனுமதிக்கின்றனர். இவ்வாறு ஒரே நேரத்தில் மக்களை கோவிலுக்குள் அனுப்பும் போது சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை என்று சிலர் தெரிவிக்கின்றனர். இது பற்றி கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக பிரதோஷ விழாவிற்கு வந்து செல்லும் சிலர், கோவிலுக்குள் பெரிய அளவில் இடவசதி இருக்கும் போது மக்களை கோவில் பிரகாரத்தில் அனுமதிக்கலாம் என்றும், சுவாமி கோவிலுக்குள் ஊர்வலம் வரும் போது சுவாமி தரிசனம் செய்ய இது வசதியாக இருக்கும் என்றும், இதை ஏன் கோவில் அலுவலர்கள் செய்வதில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர்.

இது பற்றி கோவில் அலுவலர் டி.காவேரி அவர்கள் அரசு வகுத்துள்ள விதிமுறைப்படியே தாங்கள் கோவில் நிகழ்ச்சிகளை நடத்துவதாக தெரிவிக்கின்றார். ஆனால் சில மக்கள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வழக்கம்போல் மக்களை கோவிலில் அனைத்து நிகழ்வுகளிலும் அனுமதிக்கின்றனர்என்றும், அங்கே மக்களை கோவிலுக்குள் அனுமதிக்கும்போது இங்கு ஏன் மக்களை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர்.

Verified by ExactMetrics