கீதாலட்சுமி மற்றும் ரேவதி ஆகியோர் தங்கள் சமூக பணி திட்டத்தை தொடங்கியுள்ளனர்.

ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த இளம் பெண்களான கீதாலட்சுமியும் ரேவதியும் சேர்ந்து சமூக சேவை செய்யும் மனப்பான்மையுடன் சென்னை சிட்டி சென்டர் அருகே உள்ள மீனாம்பாள்புரத்தில் சுமார் முப்பது ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கியுள்ளனர். அடுத்ததாக சாந்தோம் கடற்கரை அருகே உள்ள நொச்சி நகரில் வசிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்ய திட்டங்கள் வகுத்து வருகின்றனர்.

கீதாலட்சுமி கடந்த இருபது வருடங்களாக மாதா சர்ச் சாலையில் ரைட் சாய்ஸ் அகாடமி என்ற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்காக டியூஷன் வகுப்புகள் நடத்தி வருகிறார். இவரது அகாடெமியில் ஏழை மாணவர்களுக்கு மட்டும் இலவசமாக டியூஷன் நடத்தி வந்துள்ளார். பின்பு அந்த ஏழை மாணவர்களின் சூழ்நிலையை அறிந்து அவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு இந்த சேவை செய்வதை தொடங்கியதாக தெரிவிக்கிறார். ரைட் சாய்ஸ் அகாடமியில் டியூஷன் வகுப்புகள் கடந்த ஒருவருடமாக கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆன்லைனில் டியூஷன் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

Verified by ExactMetrics