கபாலீஸ்வரர் கோவிலில் பல தன்னார்வ குழுக்கள் உள்ளனர். இந்த குழுவினர் விழா காலங்களில் பல புதுமையான விஷயங்களை செய்வது வழக்கம். இதில் ஒரு குழுவை ஸ்ரீகாந்த் என்பவர் வழி நடத்துகிறார். இவர் கோவிலில் உள்ள நந்தவனத்தை பராமரித்து வருகிறார். இந்த நந்தவனத்தில் கிடைக்கும் பூக்களை வைத்து தினமும் சாமிக்கு அலங்காரங்கள் செய்வர்.
நவராத்திரி நேரங்களில் ஒவ்வொரு நாட்களும் இவரும் இவரது குழுவினரும் சேர்ந்து ஒவ்வொரு விதமான (சங்கு, காய்கறி,பழங்கள், இனிப்புகள்) அலங்காரங்களை செய்து வருகின்றனர். இந்த நவராத்திரி அலங்காரங்களை பார்ப்பதென்றே மக்கள் கூட்டம் கோவிலுக்கு வருகிறது.