அலெக்சா, தொழில்நுட்பம் மூலம் அழகான பாரம்பரிய வித்தியாசமான கொலுவை அமைத்துள்ள தந்தை மற்றும் மகன்.

மயிலாப்பூர் மந்தைவெளிப்பாக்கத்தில் நார்டன் தெருவில் வசித்து வரும் தந்தையும் (சுரேஷ்) மகனும்(சாகித்) சேர்ந்து வருடா வருடம் நவராத்திரி கொலு நேரத்தில் புதுமையான வித்தியாசமான விஷயங்களை செய்வது வழக்கம். இருவரும் ஐ.டி தொழிநுட்பம் தெரிந்தவர்கள்.

இந்த வருடம் கொலுவை அலெக்சா டிவைஸ் மூலம் பழைய படங்களில் உள்ள கிளாசிக்கல் நடனங்களுக்கு கொலு பொம்மைகள் நடனமாடும் வகையில் வடிவமைத்துள்ளனர். அலெக்சா டிவைஸ் மூலம் நடனத்துக்கு ஏற்றவாறு விளக்குகள் எரியும்படியும் வடிவமைத்துள்ளனர்.