மயிலாப்பூர் மாட வீதியில் விறுவிறுப்பாக நடைபெறும் ஆயுத பூஜை விற்பனை

மயிலாப்பூர் மாட வீதியில் ஆயுத பூஜை விழாவுக்காக இன்று புதன்கிழமை காலை முதல் பூஜை பொருட்கள் மற்றும் பூக்கள் பழங்கள், பொரிகடலை, காய்கறிகள், தோரணங்கள் விற்பனை களைகட்டியுள்ளது.

இந்த நேரத்தில் பொருட்களின் விலை சற்று உயர்ந்தே காணப்படுகிறது. மூன்று தோரணங்கள் 25 ரூபாய்க்கும், பூசணிக்காய் 50 முதல் 200 ரூபாய் வரை, வாழை மரம் 300 ரூபாய் வரை விற்பனையாகிறது.