தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் சில மாற்றங்கள் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. சமீபத்தில் நீதிமன்றம் அரசின் கோவில்கள் அனைத்திலும் ஐந்து வருடங்களுக்கும் மேலாக நிர்வாக ஆணையர்களின் கீழ் இயங்கி வருகிறது என்றும் இனிமேல் கோவில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் தலைமையில் இயங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. எனவே இனிமேல் அரசு கோவில்கள் அனைத்தும் அறங்காவலர்கள் தலைமையில் இயங்கும்.
இதன் விளைவாக பெரும்பாலான கோவில்களில் நிர்வாக ஆணையர்கள் மாற்றப்படுவார்கள். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ஆணையர் காவேரி அவர்கள் ஆணையராக பல ஆண்டுகளாக பணியாற்றிவருகிறார். இந்த இடத்திற்கு இனிமேல் கபாலீஸ்வரர் கோவிலுக்கு பரம்பரை பரம்பரையாக தொண்டற்றி வரும் பூந்தமல்லியில் வசித்து வரும் வேளாளர் சமூகத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்க வாய்ப்புள்ளது. எனவே கூடிய விரைவில் கபாலீஸ்வரர் கோவிலில் தலைமை நிர்வாக பொறுப்பில் புதியதாக ஒருவர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.