ஆரம்ப பள்ளிகள் திறந்த முதல் நாளில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சில விளையாட்டுகள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு ஆரம்ப, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. நிறைய மாணவர்கள் சீருடை அணிந்து தங்களுடைய பெற்றோர்களுடன் பள்ளிக்கு வந்திருந்தனர்.

பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். சில இடங்களில் இனிப்புகள் மாணவர்களுக்கு வழஙங்கப்பட்டது. அரசு ஆணைக்கிணங்க மாணவர்களுக்கு சில விளையாட்டுகள் நடத்தப்பட்டது. சில இடங்களில் பாடல்கள் பாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினர். மாணவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.

சாந்தோம் பேராலயம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் பிரைமரி பள்ளியில் மாணவர்கள் அனைவரையும் அவரவர் வகுப்பில் அமரவைத்து அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சில விளையாட்டுகளை நடத்தினர்.மேலும் விருப்பப்பட்டவர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம் என்றும், பள்ளிக்கு வராதவர்கள் மேல் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் ஆன்லைன் வகுப்புகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Verified by ExactMetrics