கல்லறை திருநாளன்று கல்லறைக்கு செல்ல அரசு அனுமதி வழங்கியதையடுத்து கல்லறைக்கு சென்று வழிபாடு நடத்திய மக்கள்

உலகம் முழுவதும் நவம்பர் 2ம் தேதி கிறிஸ்தவ மக்களால் இறந்தவர்களுக்கான கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. மயிலாப்பூர் பகுதியில் கிறித்தவ மக்களுக்கான இரண்டு கல்லறைகள் உள்ளது. ஒன்று செயின்ட் மேரிஸ் சாலையிலும் மற்றொன்று பட்டினபாக்கம் அருகேயும் உள்ளது. கடந்த வாரம் வரை கொரோனா காரணமாக மக்கள் கல்லறை திருநாள் அன்று மட்டும் அங்கு செல்ல வேண்டாம் என்றும், மற்ற நாட்களில் செல்லலாம் என்றும் கூறியிருந்தனர். ஆனால் கல்லறை திருநாளான நேற்று அரசு அனுமதி வழங்கியதையடுத்து மக்கள் கல்லறைக்கு சென்று பாதிரியார்களிடம் ஆசிகள் வாங்கினர். ஆனால் மக்கள் கூட்டம் அதிகமாக இல்லை.