மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மார்கழி மாத உற்சவ விழா கார்த்திகை மாத கடைசி நாளான இன்று தொடங்கப்பட்டுள்ளது.
மார்கழி மாத உற்சவ விழா வழக்கமாக முப்பது நாட்கள் நடக்கும். இந்த வருடம் மார்கழியில் இருபத்தி ஒன்பது நாட்களே உள்ளதால் கார்த்திகை மாத கடைசி நாளில் விழா தொடங்கப்பட்டுள்ளது.
இன்றைய முதல் நாள் தொடக்க விழாவில் மாணிக்கவாசகருக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. கோவிலுக்குள் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் ஓதுவார் சத்தகுருநாதன் திருவெம்பாவை பாடல்களை பாடினார். இந்த ஊர்வலத்தில் சுமார் நூறு பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று முதல் மார்கழி உற்சவ விழா கபாலீஸ்வரர் கோவிலில் தொடங்கியுள்ளது.