இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சிறிய கிறிஸ்துமஸ் குடிலை பார்த்து குழந்தைகள் சந்தோஷப்படுகின்றனர்.

சாந்தோம் அம்மா உணவகம் பின்புறம் சென்னை மாநகராட்சியின் இன்பினிட்டி பார்க் உள்ளது. இந்த பூங்கா காது கேளாதோரும் மற்றும் பார்வையற்றோரும் உடல் ஊனமுற்றோரும் மற்றும் மனவளர்ச்சி குன்றியோரும் பயன்படுத்த உருவாக்கப்பட்டது. இந்த பூங்காவில் மேற்கண்ட மாற்றுத்திறனாளிகள் உணரும் வகையில் சில விதமான டிசைன்கள் மற்றும் பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவர்கள் இங்கு வந்து விளையாடி மகிழ்கின்றனர். மேலும் இந்த பகுதியில் உள்ள சாதாரண மக்களையும் இந்த பூங்காவிற்குள் அனுமதிக்கின்றனர்.

பூங்கா காவலாளி மணி, கிறிஸ்துமஸ் விழாவுக்காக பொம்மைகளுடன் கூடிய ஒரு சிறிய கிறிஸ்துமஸ் குடிலை அமைத்து பூங்கா கேட் அருகே வைத்துள்ளார். மேலும் மணி அனைத்து மத விழாக்களையும் மதிப்பதாகவும் மற்றும் இந்த கிறிஸ்துமஸ் குடிலை அவருடன் வேலை செய்யும் இருவர் சேர்ந்து சொந்த செலவில் உருவாக்கியதாக தெரிவிக்கிறார். சிறிய குழந்தைகள் இந்த குடிலை பார்த்து மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளதாக தெரிவிக்கிறார். இவர் இங்கு சுமார் ஒன்றரை வருடமாக காவலாளியாக உள்ளார். இந்த பூங்கா சென்னை மாநகராட்சியின் பூங்கா. இந்த பூங்காவை அப்பாசாமி பில்டர்ஸ் பராமரித்து வருகின்றனர்.

<< நீங்கள் அழகாக உள்ள இந்த பூங்காவை இதுவரை பார்க்கவில்லை என்றால் தற்போது சென்று பாருங்கள்>>

Verified by ExactMetrics