கபாலீஸ்வரர் கோவிலின் பிரதோஷ விழாவை ஆன்லைனில் காண ஏற்பாடு

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை மாலை மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், பக்தர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில், இன்று மாலை, நந்தி அபிஷேகம் மற்றும் கோவில் வளாகத்திற்குள் நடக்கும் ஊர்வலத்தை ஆன்லைனில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கீழ்க்காணும் இணைப்பில் சென்று பிரதோஷ விழாவை பக்தர்கள் காணலாம்: http://www.youtube.com/c/MYLAPOREKAPALEESWARARTEMPLE

செய்தி : பிரபு

Verified by ExactMetrics