மயிலாப்பூர் மாட வீதிகளில் மார்கழி மாத பஜனை தொடக்கம்

மயிலாப்பூர் மாட வீதியில் மார்கழி முதல் நாளான இன்று (டிசம்பர் 16) முதல் மார்கழி பஜனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பஜனை மார்கழி மாதம் முப்பது நாட்களிலும் மாட வீதிகளில் நடைபெறும். பக்தர்கள் பஜனை பாடல்களை பாடி மாட வீதிகளை சுற்றி வலம் வருவர். இது போன்று பஜனை பாடல்களை மூன்று நான்கு கோஷ்டிகள் பாடி வருவர். நீங்கள் கூட இந்த பஜனை குழுவில் சேர்ந்து பஜனை பாடல்களை மாட வீதியில் பாடி வரலாம்.

புகைப்படம் : மதன்குமார்

மேலும் இதே போன்று காமராஜர் சாலையிலுள்ள கே.வி.பி கார்டன் அருகே இராஜா அண்ணாமலைபுரத்தில் மற்றொரு பஜனை குழுவினர் பெரியர்வர்கள் மற்றும் சிறுவர்கள் இணைந்து நாராயணசாமி தோட்டம் பகுதியில் உள்ள பெருமாள் கோவிலிலிருந்து கிளம்பி தெருக்கள் வழியாக பஜனை பாடல்களை பாடி சென்றனர்.

புகைப்படம் : கதிரவன்