மெரினா கடற்கரை சாலையில் வாகனங்களை தற்போது நிறுத்த போலீசார் அனுமதிப்பதில்லை. சர்வீஸ் சாலையில் மட்டுமே வாகனங்களை நிறுத்த அனுமதிக்கின்றனர், ஆனால் இங்கு நிறுத்துவதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும். இதனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு கூட்டமாக உள்ளது. வாகனங்களை நிறுத்துவதற்கு மக்களிடையே குழப்பமும் நிலவுகிறது. மேலும் ஏற்கனவே கடற்கரை சாலையில் டிசம்பர் 31 இரவு முதல் ஜனவரி 1ம் தேதி காலை வரை புத்தாண்டு கொண்டாட்டங்களை கொண்டாட போலீசாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ஆங்காங்கே பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.




