சுண்டல் மற்றும் கொழுக்கட்டையை விற்று வந்த தம்பதியர் இப்போது, ‘காலை சிற்றுண்டி’யையும் வழங்குகிறார்கள்.

சி.பி.கோவில் தெருவில் வசிக்கும் பிரஷாந்த் மற்றும் கிருத்திகா இவர்கள் வேலைக்கு செல்லும் தம்பதியர். இவர்கள் வேலைக்கு சென்ற நேரம் தவிர பிற நேரங்களில் பிடிகொழுக்கட்டையும், சுண்டலும் வீட்டிலேயே செய்து வீட்டின் வாசலில் விற்றுவந்தனர். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது பிரஷாந்தும் கிருத்திகாவும் வியாபாரத்தை விரிவுபடுத்தி டிபன், ஆப்பம் கடலை கறி, புட்டு வகைகளையும் சேர்த்து விற்பனை செய்கின்றனர். ஒரு பிளேட் ஆப்பம் கடலை கறி ரூ.30 க்கு விற்பனை செய்கின்றனர்.

இந்த உணவுகள் அனைத்தும் சி.பி.கோவில் தெருவில் உள்ள அவர்களின் வீட்டு வாசலில் கிடைக்கும். தொடர்புகொள்ள தொலைபேசி எண் : 9962836436