கோவிட் -19 தொற்று காரணமாக சரிந்த வியாபாரத்தை ஆன்லைன் கடையின் மூலம் உயர்த்தியவர்.

சுபம் கணேசன் மயிலாப்பூரில் மிகவும் பிரபலமான கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருபவர். இவருடைய கடை மந்தைவெளி செயின்ட் மேரிஸ் சாலையில் சுபம் புட்ஸ் என்ற பெயரில் இயங்கி வருகிறது. கோவிட் -19 தொற்று காரணமாக இவருடைய தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது. கடந்த சிலமாதங்களாக இவரின் கடைக்கு வழக்கமாக வரும் வாடிக்கையாளர்கள் கடையில் முருக்கு, மைசூர்பாக்கு , சாம்பார் பொடி, ரசப்பொடி, போன்ற பொடி வகைகளை கேட்டுள்ளனர். இதை கருத்தில்கொண்டு தற்போது கணேசன் ஆன்லைன் கடையை திறந்துள்ளார். மக்கள் எங்கிருந்தாலும் ஆன்லைன் மூலமாக தேவையானவற்றை வாங்கிக்கொள்ளலாம். இதன் மூலம் அவருடைய வியாபாரம் சற்று அதிகமாகி உள்ளதாக தெரிவிக்கிறார்.

இவருடைய கடை செயின்ட் மேரிஸ் சாலையில் வி.சி.கார்டன் அருகே உள்ளது. கடை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். தொடர்பு கொள்ள தொலைபேசி எண்: 9841019066. வலைதள முகவரி : https://d-subhamfoods.dotpe.in

Verified by ExactMetrics