இன்று (செப்டம்பர் 25) மஹாளய அமாவாசை என்பதால், மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தின் இருபுறமும் ஏராளமானோர் கூடி, தங்கள் குடும்பத்தில் இறந்த உறுப்பினர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சடங்குகளைச் செய்தனர்.
அர்ச்சகர்கள் ஒவ்வொருவருக்கும் மாறி மாறி சடங்குகளை செய்து அனுப்பினர்.
கோயில் குளத்தின் அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டது. இது சம்பந்தமாக ஒரு காவலாளி, குளம் குழம்புவதை கோவில் நிர்வாகம் விரும்பவில்லை என்று கூறினார்.
எனவே அர்ச்சகர்களும், மக்களும் ஆர் கே மட சாலையின் நடைபாதைகளிலும், சிலர் கிழக்கு விளிம்பிலும் அமர்ந்து சடங்குகள் மற்றும் பிரார்த்தனைகளை செய்தனர்.