மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இந்த வருட பங்குனி பெருவிழா மார்ச் மூன்றாவது வாரத்தில் நடைபெறவுள்ளது. கடந்த வருடம் கொரோனா தொற்றின் காரணமாக பங்குனிபெருவிழா நடைபெறவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் கோவில் குருக்கள், வழக்கமாக கோவிலில் நடைபெறும் விழாக்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் நடைபெறவில்லை என்றால், விடுபட்ட பிரமோற்சவ விழாவை அடுத்து வரும் சரியான தேதியில் சரியான நேரத்தில் மீண்டும் நடத்தலாம் என்றும், எனவே வரவுள்ள தை, மாசி மாதங்களில் பிரமோற்சவ விழாக்களை நடத்தலாம். என்று கோவில் குருக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இது பற்றி அரசு அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு கோவிலில் நடைபெற்ற நடராஜர் பிரமோற்சவம் கொரோனா ஊரடங்கு தளர்வின் காரணமாக அரசு அனுமதியளித்ததை அடுத்து கோவிலுக்கு வெளியேயும் மாடவீதிகளில் சாமி ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.
எனவே தற்போது சூழ்நிலை ஓரளவு சரியாகி உள்ள நிலையில் விடுபட்ட பிரமோற்சவ விழாவை நடத்த அரசு அனுமதிக்குமா என்று மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அவ்வாறு அனுமதி அளித்தால் இந்த வருடம் இரண்டு பிரமோற்சவ விழாக்கள் நடைபெறும்.