மயிலாப்பூர் பகுதிகளில் சில பள்ளிகள் நேற்று ஜனவரி 7ம் தேதி, மேல்நிலை (10,11 மற்றும் 12) வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க மாணவர்களின் பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினர். வருகின்ற ஏப்ரல், மே மாதங்களில் பொதுத்தேர்வு நடக்கவுள்ள நிலையில் பெற்றோரின் கருத்துக்களை தெரிந்துகொள்ள இந்த கூட்டம் தமிழக அரசின் ஆணைக்கிணங்க நடத்தப்பட்டது.
நாம் லேடி சிவசாமி அய்யர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற கருத்துகேட்பு கூட்டத்திற்கு சென்றிருந்தோம். இங்கு பங்குபெற்ற பெற்றோர்கள் சிலர் வகுப்புகளை நிபந்தனைகளுடன் நடத்தலாம் என்றும் சிலர் வகுப்புகளை நடத்தவேண்டாம் என்றும் தற்போதுள்ள ஆன்லைன் கல்வி முறையில் மாணவர்கள் நன்றாக கல்வி பயில்வதாகவும் எனவே மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயார் என்றும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு இருவிதமான கருத்துக்கள் பெற்றோரிடமிருந்து வந்துள்ளது. இந்த கருத்துக்கள் அனைத்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.