பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படாவிட்டால், அவர்களின் தேர்ச்சி விகிதம் மோசமாக இருக்கும் என்று இந்த பள்ளி கருதுகிறது.

இந்த வாரம் ஆங்காங்கே பள்ளிகளில் இரண்டாவதாக மாணவர்களின் பெற்றோர்களிடம் மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இருவிதமான கருத்துக்கள் பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்டது.

ஆர்.ஏ.புரம், மாதா சர்ச் சாலையில் செயின்ட் அந்தோணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பெரும்பாலும் படிக்கும் மாணவர்கள் ஏழை மாணவர்களே. இங்கு தினமும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த பள்ளியின் தலைமையாசிரியர் ஜாகுலின் கூறுகையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு மாணவர்களிடையே மிகுந்த உற்சாகம் இருந்தபோதிலும், அது இப்போது குறைந்து காணப்படுகிறதென்றும், இந்த பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து திரும்ப பாடங்களை நடத்தாமல் இருந்தால் அவர்களின் தேர்ச்சி விகிதம் சரியாக இருக்காது என்றும் கூறுகிறார். மேலும் இந்த பள்ளியில் சுமார் முந்நூறு மாணவிகளுக்கு மேல் 10 மற்றும் 12ம் வகுப்பில் கல்வி பயில்கிறார்கள். இவர்களுக்கு மட்டும் பாடம் சமூக இடைவெளியை பின்பற்றி பாடம் நடத்த வகுப்பறைகள் உள்ளது. ஆனால் சில பெற்றோர் அவ்வாறு பாடம் நடத்தும்போது மாணவர்கள் யாருக்காவது வைரஸ் பாதிப்பிருந்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

Verified by ExactMetrics