ஆர்.கே நகரில் நாளை பொங்கல் விழா

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆர்.கே நகரில் நாளை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 10ம் தேதி) காலை 8 மணி முதல் 10 மணி வரை பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஆர்.கே. நகர் மக்கள் சேர்ந்து நடத்துகின்றனர். இந்த விழாவில் கோலப்போட்டி, கச்சேரிகள் நடைபெறவுள்ளது, மேலும் விழாவில் கலந்துகொள்பவர்களுக்கு ஸ்னாக்ஸ் வழங்கப்படவுள்ளது. இந்த பொங்கல் விழா திருவீதி அம்மன் தெருவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் ஆர். கே. நகர் மக்கள் மட்டுமில்லாமல் அருகில் மற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களும் கலந்துகொள்ளலாம்.

ஆர். கே. நகரில் வசிக்கும் மக்கள் கடந்த பல வருடங்களாக தெருக்களை தூய்மையாக வைத்திருப்பதிலும், மற்றும் சாலைகளில் மரங்களை நட்டு பசுமையாக வைத்திருப்பதிலும் முதன்மையாக திகழ்கின்றனர். அதேபோன்று பொங்கல் விழாவையும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.