மயிலாப்பூரில் விண்டேஜ் கார்களின் கண்காட்சி. அனுமதி இலவசம்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மயிலாப்பூரில் விண்டேஜ் கார்களின் கண்காட்சி காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை ஏ.வி.எம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தின் கார் பார்க்கிங்கில் காட்சிக்கு வைக்கப்படுகிறது. இந்த கண்காட்சியை மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டார் கிளப் நடத்துகிறது.

இதில் நகரத்தில் வசிக்கும் சிலருக்கு சொந்தமான சுமார் ஐம்பது விண்டேஜ் கார்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பல கார்கள் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம் குடும்பத்தினருக்கு சொந்தமானவை, (இந்த புகைப்படத்தில் காணப்படுவது ஏ.வி.எம் சரவணன், திரைப்பட தயாரிப்பாளர்).

நேற்று மாலையே, அனைத்து கார்களும் வளாகத்திற்குள் கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட்டன. மேலும் பேனர்கள் கார்களின் விண்டேஜ் அம்சங்களை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைக்கபட்டிருந்தது.

இந்த கண்காட்சிக்கு அனைவரும் செல்லலாம். அனுமதி இலவசம். காலை10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டும்.

Verified by ExactMetrics