இந்த ஆர். ஏ. புரம் காலனியில் பெண்கள் பொங்கல் விழாவை திட்டமிட்டு நடத்துகிறார்கள்

ஆர்.ஏ. புரம், ராமகிருஷ்ணா நகரில் வசிக்கும் மக்களின் சார்பாக பொங்கல் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழா திருவீதி அம்மன் கோயில் தெருவில் நடைபெற்றது. இதில் முக்கியமாக கோலம் ரங்கோலி போட்டிகள் நடைபெற்றது. இங்கு வசிக்கும் பெண்களே இந்த பொங்கல் விழாவினை சிறப்பாக திட்டமிட்டு நடத்தினர். போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு பரிசுகளை இந்த பகுதியில் வியாபாரம் செய்யும் தொழில்முனைவோரிடம் உதவி பெற்று வழங்கியுள்ளனர்.

இது போன்ற விழாக்களை நடத்துவது மட்டுமில்லாமல் இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படைவசதிகள், சுகாதாரம், போக்குவரத்து சம்பந்தமான பிரச்சனைகளையும் சரிசெய்ய தேவையானபொழுது ஒன்றாக இணைந்து நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

Verified by ExactMetrics