ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள சி.பி.ராமசுவாமி ஐயர் அறக்கட்டளையில் பிப்ரவரி 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ‘சிந்து நாகரிகத்தின் கலை’ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடைபெற உள்ளது.
இதை சி.பி.ஆர். இன்ஸ்டாலஜிக்கல் ரிசர்ச் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பேராசிரியர் ரகுவேந்திர தன்வார் பிப்ரவரி 17ம் தேதி காலை 10.00 மணிக்கு கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார்.
புகழ்பெற்ற கலை வரலாற்றாசிரியரும், “சிந்து நாகரிகத்தின் கலைகள் மற்றும் கைவினைப்பொருட்கள்” நூலின் ஆசிரியருமான பேராசிரியர் சூடாமணி நந்தகோபால் சிறப்புரை ஆற்றுகிறார்.
நாடு முழுவதிலுமிருந்து பல புகழ்பெற்ற அறிஞர்கள் கலந்துகொண்டு சொற்பொழிவுகளை வழங்கவுள்ளனர்.