ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் நான்கு நாட்கள் நடைபெறும் ஸ்ரீராம நவமி உற்சவத்தின் ஒரு பகுதியாக மார்ச் 30ஆம் தேதி ஆஞ்சநேயருக்கு செய்திருந்த ‘பழ அலங்காரம்’ இங்கு வந்து பிரார்த்தனை செய்ய வந்திருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
இந்த கோவில் லஸ் சர்ச் சாலையில் உள்ள தனியார் வளாகத்தில் உள்ளது.
பழ அலங்காரத்தை இங்குள்ள மூத்த அர்ச்சகர் பிரபு பட்டாச்சார் செய்திருந்தார், அவர் 25 ஆண்டுகளாக கோயிலுடன் தொடர்புடையவர் என்று கூறுகிறார்.
பலவிதமான பருவகால பழங்களைப் பயன்படுத்தி இந்த அலங்காரத்தை உருவாக்க மூன்று மணிநேரம் எடுத்ததாக அவர் கூறுகிறார்.
செய்தி : வி.சௌந்தரராணி