மயிலாப்பூரில் வீற்றிருக்கும் கிட்டத்தட்ட 800 ஆண்டுகள் பழமையான கோவில்களில் ஒன்றான மாதவப் பெருமாள் கோவில் பல்லவ கால கட்டிடக்கலையை எடுத்துக் கூறும் ஒரு அழகான திருத்தலம்.
இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது.
திருக்கோயிலின் தனிச்சிறப்பு மாதவபெருமாள் கோவிலில் அமைந்திருக்கும் சந்தான புஷ்கரணி குளத்தில் அமிர்தவல்லி தாயார் ப்ருகுமுனிவருக்கு மகளாக எழுந்தருளியதாகும்.
மேலும் பேயாழ்வாரின் அவதாரத்தலமாகவும் திருத்தலம் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் மேல் வேலைகள் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 17ல் கொடியேற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்று. பிப்ரவரி 22 ஆம் தேதியில் மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளதாக திருக்கோவில் அர்ச்சகர் சுந்தர்பட்டர் கூறினார்.
செய்தி: இலக்கியா பிரபு