லஸ்ஸில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்கா இந்த ஞாயிற்றுக்கிழமை கலைஞர்களின் சோலையாக மாறவுள்ளது.
ஓவிய விழா (Art Fest) சென்னையின் 2024 பதிப்பில் சென்னை மற்றும் வெளியில் இருந்து 75 கலைஞர்கள் தங்கள் ஓவியங்கள் மற்றும் சிற்பங்களை காட்சிப்படுத்தவுள்ளனர்.
பார்வையாளர்கள் பூங்காவின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு நடந்து செல்லும்போது கலைஞர்களின் ஓவியங்களை பார்த்து ரசிக்க முடியும். Art Fest என்பது பொதுமக்களுக்கான ஒரு ஓவிய விழா (இலாப நோக்கமற்றது).
ஜெத் நகரைச் சேர்ந்த ஓவியர் ஷிவ் குமார் (புகைப்படத்தில் காணப்படுவது) நிகழ்ச்சியில் 25 ஓவியங்களை வைக்கத் திட்டமிட்டுள்ளார். “அவற்றில் பெரும்பாலானவை நீர் வண்ணங்கள் மற்றும் சில உயர்தர கடினமான பலகையில் அச்சிடப்பட்ட டிஜிட்டல் கலை.” என்று கூறுகிறார்.
2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான இரண்டு பயிற்சி பட்டறைகள், பிப்ரவரி 25 ஞாயிற்றுக்கிழமை கலைஞர் ஸ்ரேயா சுராஜ் அவர்களால் நடத்தப்படுகிறது. மேலும் விவரங்கள் மயிலாப்பூர் டைம்ஸ் வெப்சைட்டில் உள்ளது. இதில் பங்குபெற குறைந்த அளவு இருக்கைகள் மட்டுமே உள்ளது.
பிப்ரவரி 25 அன்று காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரை இந்த ஓவிய விழா நடைபெறுகிறது.