நான்கு உயர் கோபுர மின் விளக்குகள் இப்போது மாட வீதிகளுக்கு கூடுதல் வெளிச்சத்தை வழங்குகிறது.

மயிலாப்பூர் மாட வீதிகள் மண்டலத்திற்கான நான்கு புதிய ஹைமாஸ் விளக்குகளை வெள்ளிக்கிழமை மாலை மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு முறைப்படி திறந்து வைத்தார்.

பெருநகர மாநகராட்சி திட்டத்தில், இதற்காக ரூ.20 லட்சம் பட்ஜெட் ஒதுக்கப்பட்டது.

சித்திரகுளத்தின் வடக்கு முனையில் (காந்தி சிலை பகுதி), வடக்கு மாட தெரு முனையில் இந்தியன் வங்கிக்கு எதிரே, வடக்கு மாட மற்றும் கிழக்கு மாட வீதி சந்திப்பிற்கு அருகில் மாங்கொல்லை முனையிலும், தெற்கு மாட தெருவில் உள்ள சங்கீதா உணவகத்திற்கு எதிரே – ஆர் கே மட சாலை சந்திப்பிலும் புதிய ஹைமாஸ் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

Verified by ExactMetrics