மயிலாப்பூரில் பல ஆண்டுகளாக இருந்த ஈஸ்வரி மாமியை மயிலாப்பூரின் உணவுப் பிரியர்களுக்குத் தெரிந்திருக்கலாம்.
அவரது மகன் வெங்கட நாராயணன் என்கிற கணேஷ் பதினைந்து ஆண்டுகளாக அவருக்கு உதவி செய்து வந்தார். பின்னர், அவர் கௌதமா மெஸ்ஸைத் தொடங்கினார்.
முதலில் தெற்கு மாட வீதியில் இருந்த இந்த கடை பின்னர் வெங்கடேச அக்ரஹாரம் தெருவுக்கு மாற்றப்பட்டது.
இப்போது, கணேஷ், தாச்சி அருணாச்சலம் தெருவில் (ஒரு காலத்தில் ரொட்டிக்காரன் தெரு என்று அழைக்கப்பட்டது) ஒரு புதிய கடையை திறந்துள்ளார்.
இந்த மெஸ் காலை 7.30 மணியளவில் திறக்கப்பட்டு காலை உணவை வழங்குகிறது. மாலையில் டிபன் உணவு பரிமாறப்படுகிறது; சர்வீஸ் சுமார் 9 மணி வரை இருக்கும்.
விரைவில் மதிய உணவை வழங்க திட்டமிட்டுள்ளதாக கணேஷ் கூறுகிறார்.
முகவரி: கௌதமா புட்ஸ், எண் 55, தாச்சி அருணாச்சலம் தெரு, மயிலாப்பூர். தொலைபேசி: 97102 33556. இந்த இடம் புதுத்தெருவுக்கு இணையாக சித்திரகுளம் வடக்குத் தெருவின் முடிவில் உள்ளது.
செய்தி, புகைப்படம்; பாஸ்கர் சேஷாத்ரி




