உள்ளூர் தபால் நிலையங்களில் ஆதார் அட்டை முகாம்.

உள்ளூர் தபால் நிலையங்களில் ஆதார் அட்டை முகாம் ஒரு வாரமாக நடந்து வருகிறது.

இந்த முகாம்களில் ஆதார் அட்டை பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே உள்ள அட்டையில் திருத்தம் செய்ய வேண்டியவர்களும் முகாமில் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் முகாம் பிப்.27ம் தேதி நிறைவடைகிறது. அனைத்து உள்ளூர் பகுதி தபால் நிலையங்களிலும் கவுன்டர்கள் செயல்படுவதாக இந்திய அஞ்சல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Verified by ExactMetrics