மயிலாப்பூரில் முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனின் 33வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

இன்று டிசம்பர் 24ம் தேதி அ.இ.அ.தி.மு.கவை சேர்ந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனின் 33வது நினைவுநாள் அவரது ரசிகர்களாலும் மற்றும் கட்சி உறுப்பினர்களாலும் இன்று அனுசரிக்கப்பட்டது.

மயிலாப்பூரில் ஆங்காங்கே தெரு முனைகளில் எம்.ஜி.ஆரின் உருவப்படங்களை வைத்து மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். சில இடங்களில் ஒலிபெருக்கி மூலம் அவரது சிறப்பு மிக்க பாடல்களை ஒலிபரப்பு செய்தனர்.