முழு ஊரடங்கு : ஞாயிற்றுக்கிழமை காலியாக இருந்த சாலைகள், சாலைகளில் சுதந்திரமாக சுற்றி திரியும் கால்நடைகள்.

கொரோனா தொற்று விதிமுறைகள் காரணமாக மாநிலம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 23) மயிலாப்பூரில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் அனைத்தும் அமைதியாக காணப்பட்டது.

உள் தெருக்களில் கூட வாகன ஓட்டிகள் யாரும் இல்லை, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் தேவையில்லாமல் வெளியே சுற்றி திரியும் நபர்களுக்கு அபராதம் விதிக்க காவல்துறைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

நிச்சயமாக, மயிலாப்பூர் போன்ற ஒரு இடத்தில் கால்நடைகள் எல்லா நாட்களிலும் எப்பொழுதும் செய்வது போல் அவிழ்த்து விடப்பட்டன, மேலும் மந்தவெளி தெரு போன்ற மார்க்கெட் உள்ள பகுதிகளை சுற்றி தங்களுக்கான உணவை தேடித் கால்நடைகள் சுற்றித் திரிகின்றன.

தெரு நாய்களும் மெரினா லூப் சாலையில் வேடிக்கை பார்த்தன, அனைத்து மீன் கடைகளும் மூடப்பட்டிருந்ததால் இந்தக் குப்பங்களில் உள்ள இளைஞர்கள் காலை நேரத்தில் தெருவில் கிரிக்கெட் விளையாட்டை விளையாடினர்.

காந்தி சிலைக்கு அருகில் உள்ள காமராஜர் சாலையில் ஏராளமான தொழிலாளர்கள் குடியரசு தின அணிவகுப்புக்கான கேலரிகள் அமைக்க பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர்.

நேற்று, இறைச்சி மற்றும் மளிகைக் கடைகளில், ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல் சாப்பாட்டிற்காக மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.

Verified by ExactMetrics