ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் குளத்தை சுற்றியுள்ள தெருக்களில் இருந்து கடந்த பதினைந்து நாட்களாக தண்ணீர் வந்ததால் குளத்தில் தற்போது தண்ணீர் வேகமாக உயர்ந்து வருகிறது. குளத்தின் படிகளில் ஐந்து படி நிலைகளை மட்டுமே இப்போது பார்க்க முடியும்.
இங்குள்ள நந்தவனத்தை பராமரிக்கும் ஸ்ரீகாந்த், தினமும் கோவிலில் பூக்களைக் கொடுப்பதற்காகவும், கார்த்திகை தீபத்திற்காக 3000 விளக்குகளை ஏற்றி வைப்பதற்காகவும் திட்டிமிட்டுருந்த ஸ்ரீகாந்த், மழையின் காரணமாக படிகளில் கவனமாக நடக்க வேண்டும் என்றும், இங்கு நீர்மட்டம் உயருவதைப் பார்க்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
ஸ்ரீ ஆதி கேசவப்பெருமாள் கோயிலின் குளமான சித்திரகுளம் தற்போது நிரம்பியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, சில பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுகள் மிதக்கின்றன.
ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ மாதவப் பெருமாள் கோயில் குளங்களும் நிரம்பி வருகின்றன, சுமார் 75% மழைநீர் நிரம்பியுள்ளது.
செய்தி: மதன் குமார்
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…