ஆழ்வார்பேட்டை ரேஷன் கடை, எம்.எல்.ஏ அலுவலகம் அமைந்துள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்திற்கு மாற்றப்பட்டது.

ஆழ்வார்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தின் தரை தளத்தில் இருந்த ரேஷன் கடையில், மழை நீர் புகுந்ததின் காரணமாக, ரேஷன் கடைக்கு எதிரே உள்ள மயிலாப்பூர் எம்.எல்.ஏ அலுவலகம் அமைந்துள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்திற்கு ரேஷன் கடை மாற்றப்பட்டுள்ளது. ரேஷன் பொருட்கள் வாங்க வருபவர்கள் எம்.எல்.ஏ வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக கடைக்கு வந்து வாங்கி செல்லலாம்.

ஞாயிற்றுக்கிழமை மழைக்குப் பிறகு இந்தக் கடை வெள்ளத்தில் மூழ்கியது. சிபி ராமசாமி சாலை வழியாக கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது மட்டுமின்றி, இந்த கட்டிடத்தின் மேல் பகுதி வழியாகவும் மழைநீர் புகுந்தது.

Verified by ExactMetrics