கற்பகாம்பாள் திங்கள்கிழமை மாலை நவராத்திரி மண்டபத்தில் அன்ன வாகனத்தில் எழுந்தருளுவார்

இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா, ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை மாலை கற்பகாம்பாள் அன்ன வாகனத்தில் எழுந்தருளப்பட்டு கோயில் வளாகத்தில் வீற்றிருகும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

நவராத்திரி மண்டபத்தில் அம்பாள் வைக்கப்பட்டு இரவு 9 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.

தீபாராதனை மற்றும் ஓதுவார்களின் புனித பாடல்கள் வழங்கலுடன் மாலை நிகழ்வு நிறைவடையும்.

செய்தி: எஸ்.பிரபு

Verified by ExactMetrics