புனித சூசையப்பர் ஆரம்ப பள்ளியில் ஆண்டு விழா

மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் புனித சூசையப்பர் ஆரம்ப பள்ளியின் 135 வது ஆண்டு விழா மற்றும் 2024 ஆண்டில் பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா பிப்ரவரி 16ம் தேதி மாலை 4 மணி அளவில் பள்ளி வளாகத்தில் நடந்தது.

இவ்விழாவில் முதன்மை விருந்தினராக கல்வி உளவியலாளர் முனைவர் சரண்யா ஜெயக்குமார் கலந்து கொண்டார். மேலும் பிரான்சிஸ்கோ சபை மாநில தலைவி மரியா செல்வி புனித பிரான்சிஸ்க்கு மறைபரப்பு சபை மாநில ஆலோசகர் சிறிய புஷ்பம் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.

 

Verified by ExactMetrics