லேடி சிவசாமி ஐயர் பெண்கள் பள்ளியின் ஆண்டு விழா: அக்டோபர் 21

லேடி சிவசாமி ஐயர் பெண்கள் மேல்நிலை பள்ளியின் 154வது ஆண்டு விழா. மயிலாப்பூர் அருகே உள்ள ஆர்.ஆர்.சபா அரங்கில் அக்டோபர் 21ல் நடைபெற உள்ளது.

எஸ். சரஸ்வதி, சுங்கம் மற்றும் ஜிஎஸ்டி ஐஆர்எஸ் அதிகாரி மற்றும் இப்பள்ளியை நிர்வகிக்கும் தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் கல்வி சங்கத்தின் தலைவர் சீனிவாசன் கே.சுவாமி தலைமை தாங்குகின்றனர்.

கடந்த ஆண்டில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவதுடன், மேடையில் கலாசார நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.

ஆண்டு விழா மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது.