மயிலை மாதாவின் ஆண்டு விழா தொடங்கியது

பொதுவாக மயிலை மாதா என்று அழைக்கப்படும் Our Lady of Mylapore ஆண்டு விழா நவம்பர் 26 முதல் சாந்தோம் கதீட்ரலில் கொண்டாடப்படுகிறது. இது ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும். ஒவ்வொரு மாலையும், கதீட்ரலில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஹோலி மாஸ் நடைபெறுகிறது. சனிக்கிழமை மாலை, பேராயர் Rev. George Antonysamy ஹோலி மாஸ் நிகழ்விற்கு தலைமை தாங்குகிறார். மரியாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கொடியைக் இறக்கி, ஹோலி மாஸ் நிகழ்வுடன், ஞாயிற்றுக்கிழமை மாலை விழா நிறைவடைகிறது. இந்த தேவாலயத்தில் தினமும் நடைபெறும் மாஸ் நிகழ்விற்கு, வைரஸ் தொற்றின் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் ஒரு சில பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இருப்பினும், பிற உள்ளூர் தேவாலயங்களில் மக்கள் மாஸில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.