லஸ்ஸில் உள்ள பூங்காவில் பிப்ரவரி 26ல் நாள் முழுவதும் நடைபெறும் ஓவிய விழா (Art Fest) 2023க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வருடாந்திர ஓவிய விழா (Art Fest) சென்னை நிகழ்வு, தொற்றுநோய் காலங்களுக்குப் பிறகு, அதன் 2023ம் ஆண்டின் ஓவிய விழா பிப்ரவரியில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கலைஞர்கள், தொழில்முறை, செமி புரபஷனல் , அமெச்சூர் மற்றும் கலை மாணவர்கள் மற்றும் பதின்ம வயதினர் தங்கள் படைப்புகளைக் காண்பிப்பதற்காக நடத்தப்படுகிறது.

ஓவிய விழாவின் (Art Fest) இந்த பதிப்பு பிப்ரவரி 26, ஞாயிற்றுக்கிழமை சென்னை லஸ்ஸில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் நடைபெறும். காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை. சுமார் 75 கலைஞர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்துவார்கள்.

இந்த நிகழ்வில் பங்கெடுக்க அழைக்கப்படுவதற்கு, நீங்கள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் (விண்ணப்பங்களை பிப்ரவரி 17, 2023க்குள் சமர்ப்பிக்க வேண்டும்) மேலும் உங்களுடைய மாதிரிகளின் (sample work) அடிப்படையில் ஏற்பாட்டாளர்கள் அழைப்பிதழ்களை அனுப்புவார்கள்.

டீன் ஏஜ் சிறார் கலைஞர்களும் பங்கேற்கலாம் ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களிடமிருந்து, ஒரு பொதுவான ஸ்டாலில் காட்சிப்படுத்த அமைப்பாளர் 2 படைப்புகளை மட்டுமே எடுப்பார்.

குறைந்த இடவசதி இருப்பதால் தேர்வு செயல்முறை இருக்கும். மேலும் விவரங்களை www.mylaporetimes.comல் பார்க்கவும்.

கோப்பு புகைப்படம்

Verified by ExactMetrics