தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி அஞ்சலி செலுத்திய கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள்.

இசை உலகின் ஜாம்பவான் தியாகராஜரின் நினைவை போற்றும் வகையில் தியாகராஜ ஆராதனை விழாவை இசை உலகினர் கொண்டாடுகின்றனர்.

மயிலாப்பூர் மத்தள நாராயணன் தெருவில், அண்ணன் தம்பிகள் என எட்டு நபர்கள் ஒன்று சேர்ந்து இந்த ஆராதனை விழாவை எழுபது ஆண்டுகளாக விமர்சியாக நடத்தி வருகின்றனர்.

இந்தாண்டு தியாகராஜர் பாடிய பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடி அவருக்கு மரியாதை செலுத்தினர்.

விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு பிரசாதமாக தேங்காய் சாதம்,புளியோதரை, தயிர் சாதம், உருளைக்கிழங்கு போண்டா வழங்கப்பட்டது.

செய்தி: இலக்கியா பிரபு

Verified by ExactMetrics