ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா விழா

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா விழா டிசம்பர் 25 மாலை மற்றும் 26 ஆம் தேதி விடியற்காலையில் நடைபெறவுள்ளது.

டிசம்பர் 25 அன்று இரவு சுமார் 8 மணிக்கு பஞ்சமூர்த்தி ஊர்வலம் நடைபெறும். நடராஜப் பெருமானுக்கு நள்ளிரவில் அபிஷேகம் தொடங்கும். மறுநாள் காலை 5 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், காலை 9 மணிக்கு நடராஜப் பெருமானின் வீதியுலாவும் துவங்குகிறது.

கோவில் இரவு முழுவதும் திறந்திருக்கும்.

Verified by ExactMetrics