மெரினா கடற்கரையில் கட்டணத்துடன் கூடிய பார்க்கிங் வசதியை கையாள்வது பெரும் சவாலாக உள்ளது.

மெரினா கடற்கரையில் ஞாயிற்றுகிழமைகளில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றாலும் வாரத்தின் மற்ற நாட்களில் மக்கள் கூட்டம் கடற்கரைக்கு வந்து செல்கிறது.

இதன் காரணமாக மெரினா கடற்கரையில் சாலையோர கடைகளை பெரும்பாலான வியாபாரிகள் திறந்து வைத்துள்ளனர். தற்போது சென்னை மாநகராட்சி கடற்கரைக்கு வருவோரின் வாகனங்களை சர்வீஸ் சாலைகளில் நிறுத்த கட்டணம் வசூலிக்கின்றனர்.

வார இறுதி நாட்களில் வரும் கூட்டம் போன்று மற்ற நாட்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. எனவே இந்த வாகன நிறுத்துமிடத்தில் பணியிலுள்ள ஊழியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகள், மாநகராட்சி நிர்வாகம் கட்டணத்துடன் கூடிய பார்க்கிங் வசதியை திட்டங்கள் வகுத்து சிறப்பாக செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.

Verified by ExactMetrics