இந்திய பரதநாட்டியக் கலைஞர்கள் சங்கத்திற்கு (ABHAI) புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிரியா முரளி தலைவர்.

                                                     பிரியா முரளி

இயல் இசை நாடக மன்ற மண்டபத்தில் மே 29 அன்று நடைபெற்ற ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இந்திய பரதநாட்டிய கலைஞர்கள் சங்கத்திற்கு (ABHAI) புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதுதான் புதிய அணி –

தலைவர்: பிரியா முரளி. துணைத் தலைவர்கள்: பார்வதி ரவி கந்தசாலா, எஸ்.ஜானகி
செயலாளர்: பினேஷ் மகாதேவன்
இணைச் செயலாளர்: சுகன்யா ரவீந்தர்
பொருளாளர்: பி.பானுமதி
செயற்குழு உறுப்பினர்கள்
ஷோபனா பால்சந்த்ரா, பிரியா தீட்சித், பத்மலட்சுமி சுரேஷ், மகாலட்சுமி அஸ்வின், சண்முகம் சுந்தரம், நிதீஷ் குமார், எம் எஸ் ஆனந்த ஸ்ரீ
மேனேஜர்: ஐஸ்வர்யா ராஜ்குமார்.
அபாயின் (ABHAI) அலுவலகம் ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபா மண்டபத்தில் அமைந்துள்ளது.

Verified by ExactMetrics