வெள்ளீஸ்வரர் கோவிலில் விமர்சியாக நடைபெற்ற வைகாசி உற்சவத்தின் திருக்கல்யாணம் நிகழ்ச்சி

மயிலாப்பூர் தெற்கு மாடத் தெருவில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) மாலை வருடாந்திர வைகாசி உற்சவத்தின் திருக்கல்யாண விழா நடைபெற்றதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு நடைபெற்ற பத்து நாள் உற்சவம் திருக்கல்யாண நிகழ்வுடன் முடிவுக்கு வந்தது.

திங்கள்கிழமை மாலை பிக்ஷாடனர் விழா மற்றும் அம்பாள் மோகினியாக காட்சியளித்ததைத் தொடர்ந்து, கோவிலில் நடந்த உற்சவத்தின் இறுதி நாளான இன்று காலை 6 மணிக்கு நடராஜர் மற்றும் சிவகாமியின் உற்சவ ஊர்வலம் தொடங்கியது. (புகைப்படம் கீழே)

திருக்கல்யாண உற்சவத்திற்குப் பிறகு செவ்வாய்க்கிழமை இரவு கொடி இறக்கப்பட்டது.

செய்தி: எஸ். பிரபு

Verified by ExactMetrics