ஆழ்வார்பேட்டை மையத்தில் தடுப்பூசி போட மக்கள் வருகை அதிகரிப்பு. தடுப்பூசி போட வருபவர்களுக்கு வழங்கப்படும் டோக்கன்கள் விரைவாக தீர்ந்துவிடுகிறது.

இந்த நேரத்தில் மக்கள் நிறைய பேர் கொரோனா தடுப்பூசி போட்டுவருகின்றனர். இதுபோன்று மக்களிடையே தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்துள்ளதை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள கிளினிக்குகளில் பார்க்க முடிகிறது. சென்னை மாநகராட்சி தடுப்பூசி போடுவதை ஆழ்வார்பேட்டை சி.பி இராமசாமி சாலையில் உள்ள மாநகராட்சி கிளினிக்கில் நடத்தாமல், கிளினிக்கின் அருகே பீமன்ன கார்டன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடத்துகின்றனர். இங்கு தடுப்பூசி போட வரும் மக்களுக்கு சுமார் எட்டு மணியளவில் நூறு டோக்கன்கள் வழங்குவதாகவும் இந்த டோக்கன்கள் அரை மணிநேரத்திற்குள் தீர்ந்து விடுவதாகவும், அந்த அளவுக்கும் மக்கள் கூட்டம் வருவதாகவும் இங்கு பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் கூறுகின்றனர்.

தடுப்பூசியை காலை பத்துமணியளவில் போடத்தொடங்குகின்றனர். தற்போது கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே இங்கு போடப்படுகிறது. மக்கள் சென்னை கார்ப்பரேஷனின் வலைதளம் மூலமாகவும் தடுப்பூசி போட பதிவு செய்யலாம் என்றும், ஆனால் நிறைய மக்கள் காலையிலேயே நேரடியாக தடுப்பூசி போடும் மையத்திற்கு வந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர் என்று இங்கு பணியாற்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Verified by ExactMetrics